azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

bharathwaj & k.s. chithra - ovvoru pookalume lyrics

Loading...

[பாடல் வரிகள் + “ஒவ்வொரு பூக்களுமே” + பரத்வாஜ், கே.எஸ். சித்ரா]

[intro]
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

[chorus]
ஒவ்வொரு பூக்களுமே, சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

[post+chorus]
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்

[refrain]
மனமே, ஓ மனமே, நீ மாறிவிடு…
மலையோ, அது பனியோ, நீ மோதி விடு…

[non+lyrical vocals]

[verse 1]
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
“என்ன இந்த வாழ்க்கை” என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்?
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்?
கண்ணில் என்ன நீரோட்டம்?
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்…
[refrain]
மனமே, ஓ மனமே, நீ மாறிவிடு…
மலையோ, அது பனியோ, நீ மோதி விடு…

[chorus]
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

[verse 2]
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா, உன் மனதை கீறி
விதை போடு, மரமாகும்
அவமானம், படுதோல்வி
எல்லாமே உரவாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன, என் தோழா?
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்…
[refrain]
மனமே, ஓ மனமே, நீ மாறிவிடு…
மலையோ, அது பனியோ, நீ மோதி விடு…

[chorus]
ஒவ்வொரு பூக்களுமே, சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

[post+chorus]
நம்பிக்கை என்பது வேண்டும், நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும், ஒரு நாளில்

[refrain]
மனமே, ஓ மனமே, நீ மாறிவிடு…
மலையோ, அது பனியோ, நீ மோதி விடு…



Random Lyrics

HOT LYRICS

Loading...