![azlyrics.biz](https://azlyrics.biz/assets/logo.png)
dhilip varman,karthik - meendum meendum lyrics
மீண்டும் மீண்டும் ஓயாமல்,
காதல் நெஞ்சை அள்ளும்,
நீயே எந்தன் சுக வாசல்.
கல்லும் முள்ளும் கண்டாலும்,
உண்மை காதல் வாழும்,
உன்னில் நானே
கண்ட வேதம்.
பனிப்பூவாய்
என்மேல் விழுந்தாய், உயிரே உறையுதடி.
இதற்கும் மேலாக ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி.
என் கவிதையில் சேருதடி.
மீண்டும் மீண்டும் ஓயாமல்,
காதல் நெஞ்சை அள்ளும்,
நீயே எந்தன் சுக வாசல்,
உண்மைக்காதல் மறையாது,
பாதைக்கூட தவறாமல்,
ஜீவன் ஒன்றே எண்ணி வாழும்.
எந்த காலம் பிறந்தாலும்
காலம் சொல்லும் பதிலாக,
தெய்வீகமே இந்த காதல்.
தாயைப்போலே… நான் அள்ளிக் கொள்வேன்,
உன்னை உன்னை நெஞ்சுக்குள்ளே…
விடுமுறை காணாமல்
தொடர்ந்திடக்கூடாதா,
நானும் நீயும் வாழ்க்கை தூரம்,
மீண்டும் மீண்டும் ஓயாமல்,
காதல் நெஞ்சை அள்ளும்,
நீயே எந்தன்
சுக வாசல்,
கல்லும் முள்ளும் கண்டாலும்,
உண்மை காதல் வாழும்,
உன்னில் நானே கண்ட வேதம்.
மின்னல் ஒன்று கரை வீச,
நெஞ்சம் ஒன்று குடை சாய,
மின்னல் நீயே,
நெஞ்சம் நானே…
தென்றல் வந்து முத்தமிட,
கோரத்தீயும் பூவாய் மாற,
தீயும் நானே, தென்றல் நீயே,
ஆசையெல்லாம் நான்
அள்ளிக்கொண்டு,
வந்தேன் வந்தேன்
உந்தன் வாசல்.
புயலென்ன மழையென்னவோ,
கடந்திட வேண்டாமா,
நானும் நீயும் வாழ்க்கை தூரம்.
மீண்டும் மீண்டும் ஓயாமல்,
காதல் நெஞ்சை அள்ளும்,
நீயே எந்தன் சுக வாசல்.
கல்லும் முள்ளும் கண்டாலும்,
உண்மை காதல் வாழும்,
உன்னில் நானே
கண்ட வேதம்.
பனிப்பூவாய்
என்மேல் விழுந்தாய், உயிரே உறையுதடி.
இதற்கும் மேலாக ஆசைகள் வந்து
கவிதையில் சேருதடி.
என் கவிதையில் சேருதடி.
மீண்டும் மீண்டும் ஓயாமல்,
காதல் நெஞ்சை அள்ளும்,
நீயே எந்தன் சுக வாசல்,
Random Lyrics
- strand of oaks - taking acid and talking to my brother lyrics
- french thunder - i've found you lyrics
- alltta - match lyrics
- treat - endangered lyrics
- we blame the empire feat. stefan eberl [acoustic - wtltr lyrics
- tribulations - wolves lyrics
- christina grimmie - invisible lyrics
- head ice - let me in ft. bigg k lyrics
- sun city girls - cia man lyrics
- ante ciento veinte - invierno lyrics