azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ghibran feat. sid sriram - thaarame thaarame lyrics

Loading...

வேறெதுவும் தேவை இல்லை நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன் என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா

மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே
மாறுவேடம் போடுது என் நாட்கள் தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே
ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய் உடைந்து போனாலும்
அதன் ஒரு துகளில் உன்னை கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா

நீ நீங்கிடும் நேரம் காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம் தீ மீதிலும் ஈரம்

நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல் நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது

உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது
உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே நீ தானே
தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே நீ உயிரே வா



Random Lyrics

HOT LYRICS

Loading...