harris jayaraj - aathangara orathil lyrics
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
காத்தடிக்கும் தெசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆராயி முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்து போட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அடி இன்னொரு தடவ இதயம் சுளுக்க
இடுப்ப ஆட்டுதே
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
பெண்ணே மாமா கிட்ட மோது
நீ நடக்குற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருல சுத்துற நாயா
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற
உங்கப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாத்திருக்க பாத்திருக்க நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் பெண்ணே ஒரு முறை காதல சொல்லு
உன்ன பிடித்திருக்க பிடித்திருக்க நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் பெண்ணே காதல காதிலே சொல்லு
வாய் பேசும் வாசனை கிளியே
ஊர் பேசும் ஒவிய சிலயே
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானா
வடகறி
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒருதல நீதானே
உன்னாலே தரதல நாந்தானே
அட நெருப்பால விழுந்த
ரேசன் அருசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பார்த்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் குருவிய போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல
காலாலே ஆடுது கொலுசு
ஏலேலோ பாடுது மனசு
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வறியா
ஏமாத்தி போவது சரியா
என்ன சாவ்கார்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகொறையா
மன்னாதி மன்னனா இருந்தேனே
உன்னால தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா
வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலா சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த
என்னையே இப்ப நம்பியார் ஆக்காதே
ஆத்தங்கர…
கம்மாக்கர…
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில்குப்பம் ஜிஞ்சினாக்கு ஜெனக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா டண்டணக்கா டணக்கு
காத்தடிக்கும் தெசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறிபோல
ஆராயி முழுங்குற ஆள
Random Lyrics
- cheem - skate shoes lyrics
- abstract sense - tomorrow lyrics
- pedro miguel - si no estas lyrics
- lil yachty - trippin 2 hard (snippet) lyrics
- günther and the jauchs - lotta langfingerin im rabattrausch lyrics
- els amics de les arts - mentrestant lyrics
- хабип мацуевич (habip matsuevich) - сон (sleep) lyrics
- skillibeng - coke lyrics
- ourangmedan - нерешённость lyrics
- bluntedlos - can't stop lyrics