k. s. chithra & s. p. balasubrahmanyam - pooja vaa lyrics
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
இந்திர மண்டலம் தேடும் அழகே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
சரணம் -1
பூவைப் பறிக்கும் போது அதில் ஈரம் உன் காதல்
வாளை எடுக்கும் போது அதில் வீரம் உன் காதல்
ஜன்னல் திறக்கும் போது வரும் காற்றில் உன் காதல்
கண்கள் உறங்கும் போது வரும் கனவில் உன் காதல்
உன் பேரைச் சொன்னாலே முத்தத்தின் சத்தங்கள்
நீ என்னைக் கண்டாலே தித்திக்கும் ரத்தங்கள்
நீ போடும் ஒரு கோலத்திலே
புள்ளியைப் போல் நான் இருந்தேனே
நீ தீண்டும் அந்த நேரத்திலே
பறவையைப் போல் நான் பறந்தேனே
நீ போகும் வழியெங்கும் நான்தானே ஆகாயமே
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
சரணம் -2
விளக்கை மூடும் சிமிழாய் நான் உன்னை மூடுகிறேன்
உன் மேல் விழுந்த வெயிலால்
நான் சருகாய் மாறுகிறேன்
உந்தன் நினைப்பில் தானே நான் இன்னும் வாழுகிறேன்
உந்தன் சிரிப்பில் தானே என் உதயம் காணுகிறேன்
மீன் உன்னைக் கடித்தாலே ஆற்றுக்குத் தீ வைப்பேன்
மோகத்தீ மூட்டாதே ஆற்றுக்குள் நான் நிற்பேன்
உன் மனதில் என்னை நிரப்பிவிடு
உன் உலகில் என்னை பரப்பிவிடு
கடமைகளை நீ மறந்துவிடு
கண்களிலே நீ இருந்துவிடு
அன்பே உன் நிழல் கூட என் மீது விழ வேண்டுமே
பூஜா வா பூஜா வா
பூஜைக்கு வந்த நிலவே வா
ரோஜா வா ரோஜா வா
ஏதேன் தோட்டத்தின் ரோஜா வா
உறங்கும் போதும் வாழும் நினைவே வா
தோளில் நீ தூங்கு உன் தூக்கம் நானாவேன்
உன் மேல் பூ விழுந்தாலும் நான் உள்ளம் புண்ணாவேன்
உன்னோடு நான் வாழ்ந்தால் மரணத்தின் பயமில்லையே
Random Lyrics
- as it is - she lyrics
- bishøp - f.f.y. (feeling for you) lyrics
- primera generacion - si yo fuera tu lyrics
- jeffrey soffer - fire and ice lyrics
- until we die - countdown to extinction lyrics
- november - rain lyrics
- random encounters feat. vhinfy - alola form for me lyrics
- johnny clegg - asimbonanga (radio version) lyrics
- kollegah - imperator - tracklist & cover lyrics
- mark hollmann - follow your heart lyrics