azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaber vasuki - frangipani lyrics

Loading...

என் ப்ரெண்ட் பேரு நிலா
வேல முடிச்சுட்டு போவோம் உலா
விட்டு குடுக்காத ஜூலை வெட்கையில
அன் டைம் ல ஆழ்வார்பேட்டையில
திடுதிப்புனு கூலா
ஒரு காத்து வீசுச்சு எங்கமேல
அந்த காத்துல குண்டு மல்லி வாசம்
அவ கொழந்த போல சிரிச்சா

இரண்டாயிரத்தி பதிமூணு
நினைவிருக்கு அன்னைக்கு ஃபுல் மூணு
தெருவிளக்கு வெளிச்சத்துல
மிதந்து வந்த பூவ பிடிச்சா
இந்த பூ இந்த பூ பேரு ஃபிரங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியானி னு கேட்டா
இந்த பூ இந்த பூ பேரு ஃபிரங்கிபானி
இத பாக்கும் போது
என்ன நெனச்சுபியானி

அப்பப்போ நிலா காணாம போவா சில
நாளாகும் வாரமாகும்
சில சமயம் மாசமாகும்
கால் பன்னா ஃபோன் சுவிட்ச் ஆஃப்
டெக்ஸ்ட் பன்னி பாத்தா நோ டிக் மார்க்
மச்சா நிலா எங்கிருக்கா
எனக்கும் தெரியல யாருக்கும் தெரியல
தேய்பிறையில் மறையும் நிலவு
வளர்பிறை வலம் வருவதை போலே
திடீர்னு கால் பன்னா ஃபோன் எடுத்தேன்
ஹை திஸ் இஸ் நிலா
வா கேபர் பீச்சுக்கு போலாம்
தெருநாய்கெல்லாம் பிஸ்கட் போட
உன் சட்ட கிளிஞ்சுருக்கு
புது சட்ட நா வாங்கி தாரேன்
என்னமா பாடுற நீ ஹையோ
மெய் சிலிர்த்தே போனேன்
நீ மேடை ஏறும்போது
முதல் வரிசையில் வந்து நிப்பேன்

அது இருக்கட்டும் நிலா
எங்க போன இத்தன நாளா
உன்ன எல்லாரும் தேடி பாத்தோமே
ஆனாலும் தெரியல
அது ஒன்னு இல்ல விளையாட்டா
நா சுத்தி பாக்க போனேன் கல்கட்டா
நன் ஆலாம்னு ட்ரை பண்ணேன்
பட் செட் ஆலனு சிரிச்சுட்டா

இரண்டாயிரத்தி பதிமூணு
நினைவிருக்கு அன்னைக்கு ஃபுல் மூணு
மார்கழி மழையில் பஸ் ஸ்டாண்ட் கொடையில்
கையில் எதோ தந்தா
இந்த கொக்கு இந்த கொக்கு பேரு
ஓரிகாமி
இத பாக்கும்போது
என்ன நெனச்சுபியானி னு கேட்டா
இந்த கொக்கு இந்த கொக்கு பேரு
ஓரிகாமி
இத பாக்கும்போது
என்ன நெனச்சுபியா நீ
காலம் மாறி போச்சு
நானும் ஊரு மாறி போனேன்
நாங்க பேசுறது கம்மியாச்சு
மெதுவா மெதுவா
ஆடி அம்மாவாச
கால் பண்ணி கதைகள் பேச
நா என் கதைய சொல்வேன்
அவ அவத சொல்வா
நாளைக்கு பேசலானு
ரெண்டு பேரும் சொல்லி வெப்போம்
அடுத்த நாள் ரெண்டு பேரும்
மறந்தே போவோம்

ஆனா பழைய நட்பு
காஞ்ச சனல போல
ஒரு பொறி பட்டாலே
பத்திக்கும் அல்லவா

திடீர்னு ஒரு நாள்
அன் டைம் ல
ஒரு கால்
யார்றானு பாத்தா
அப்துல்லா
என்ன மச்சா எப்படி இருக்க
மச்சான் தகவல் சொல்ல கூப்டேன்
என்ன மச்சான் என்ன தகவல்
மச்சான் நிலா
நிலா க்கு என்னடா?
நைட்டொரு பத்தரை இருக்கும்
பக்கத்து வீட்டு ஆண்டி க்கு கேட்டுச்சு சத்தம்
என்னடா னு வெளிய வந்தா
பார்க்கிங் லாட்டில் ஒளி வட்டம்
அந்த வட்டத்திற்குள் மிதந்திருந்தா நிலா
றெக்க விரிச்சு பறந்து போனா நிலா

முதல் ல உணர்ந்த துரோகம்
எப்படி அவ பறக்கலாம்
பின்ன வந்துச்சு கோவம்
எப்படி அவ பறக்கலாம்
மெல்ல ஊருச்சு சோகம்
எப்படி அவ பறக்கலாம்
இப்போ சுமக்குறேன் பாரம்
எப்படி அவ பறக்கலாம்

முதல் ல உணர்ந்த துரோகம்
எப்படி அவ குதிக்கலாம்
பின்ன வந்துச்சு கோவம்
எப்படி அவ குதிக்கலாம்
மெல்ல ஊருச்சு சோகம்
எப்படி அவ குதிக்கலாம்
இப்போ சுமக்குறேன் பாரம்
எப்படி அவ குதிக்கலாம்

எத்தனை பேர் கனவுக்கு
அவள் வழி காட்டிய ஒரு கரை விளக்கு
எத்தனை பேர் உறவுக்கு
அவள் தீபம் தெளித்த அகல் விளக்கு
அவள் ஒன்னும் புனிதமில்ல
அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல
இருள் வாழும் மனிதனுக்கோ
அவள் போலே ஒளி தர ஆளே இல்ல

நிலா நா மேடை ஏறினா
பாட்டு பாடினா வரனியே
நிலா நா தேடி பாக்குறேன்
தேடி பாக்குறேன் தெரிலியே

நிலா நா மேடை ஏறினா
பாட்டு பாடினா வரனியே
நிலா நா தேடி பாக்குறேன்
தேடி பாக்குறேன் தெரிலியே

நிலா நா மேடை ஏறுறேன்
பாட்டு பாடுறேன் கேட்குதா
நிலா உன் முகத்தை தேடி
தேடி பாக்குறேன் தெரியுதா

நிலா நா மேடை ஏறியும்
பாட்டு பாடியும் பாத்தனே
நீ தான் என் கண் இமைப்பதற்குள்
நீ மறஞ்சு போனியே

நீ ஒரு கனவ கொண்டா
இந்த ஊருக்கு எடுத்துட்டு வந்தா
தனியா இருப்ப இரவில்
நிலவ போயி பாரு
அவட்ட உன் ஆச சொல்லு
அவட்ட உன் கனவ கேளு
உன்ன காத்திருப்பா
காத்திருப்பா
நிலா

எத்தனை பேர் கனவுக்கு
அவள் வழி காட்டிய ஒரு கரை விளக்கு
எத்தனை பேர் உறவுக்கு
அவள் தீபம் தெளித்த அகல் விளக்கு
அவள் ஒன்னும் புனிதமில்ல
அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல
இருள் வாழும் மனிதனுக்கோ
அவள் போலே இதம் தர ஆளே இல்ல

நிலா நிலா நீ ஓடி வா
நில்லாமல் என்னை தேடி வா



Random Lyrics

HOT LYRICS

Loading...