azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

manjari & devan ekambaram - yedho ninaikiren lyrics

Loading...

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே

யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே

உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே
இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?

கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?

அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்
நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்



Random Lyrics

HOT LYRICS

Loading...