azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

p. susheela feat. t. m. soundararajan - aduthathu ambujathai lyrics

Loading...

பெ: அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா … ஏன்னா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு பொடவயை வாங்கிக்கிறா
பட்டு பொடவயை வாங்கிக்கிறா
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி. பட்டூ…
அடுத்தாத்து சங்கதியெல்லாம் நமக்கேண்டி
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத மூணு ஷோவும் பாத்தது நீதாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கேதடி… பட்டூ
புடவைக்கேதடி.
அடுத்தாத்து சங்கதியெல்லம் நமக்கேண்டி

பெ: உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு
உங்களுக்கு தான் வாக்கப்பட்டு என்னத்த கண்டா பட்டு

ஆ: பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு

பெ: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகைனட்டுண்ண்டா நேக்கு
எட்டுக்கல்லு வேசரி போட்டா எடுப்பா இருக்கும் மூக்கு

ஆ: சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு
சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு

பெ: எப்போ இருந்தது இப்போ வர்ரதுக்கு எதுக்கெடுத்தாலும் சாக்கு . ம்,, கும்
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: ஏட்டிக்கு போட்டி பேசாதடி பட்டூ.ஊ….

பெ: பேசினா என்ன வைப்பேளா ஒரு குட்டு…ஊ…

ஆ: ஆத்திரம் வந்த பொல்லாதவண்டி கிட்டு.ஊ.

பெ: என்னத்த செய்வேள்

ஆ: சொன்னத்த செய்வேன்

பெ: வேரென்ன செய்வேள்

ஆ:: அடக்கி வைப்பேன்

பெ: அதுக்கும் மேலே

ஆ: ம்ம்…. பல்ல உடைப்பேன்

பெ: ஆ…ஆ.ஆ.ஆ….
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரன் கொஞ்சுறத கேட்டேளா

ஆ: பட்டூ. அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி
பட்டு நமக்கேண்டி, பட்டு நமக்கேண்டி…



Random Lyrics

HOT LYRICS

Loading...