s a rajkumar & swarnalatha - kadhal kaditham lyrics
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் …
பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில்
உனது பெயர் தான் அதிகம் எனக்கு
வானம் கையில் எட்டினால்
அங்கும் உன்னை எழுதுவேன்
நிலவை கொண்டு வந்துதான்
பெயரில் வர்ணம் தீட்டுவேன்
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் …
Random Lyrics
- elanh - franco lyrics
- sevara nazarkhan - je t'aime lyrics
- fat joe - so excited lyrics
- karolina beyond - baba nam kevalam lyrics
- edgar mao branca - recado ao presidente lyrics
- wild love - california sunset lyrics
- emilio_mud - not by chance lyrics
- peer tasi - kama tov lyrics
- fergie - yak lyrics
- sage francis - i'm not a hater lyrics