azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sapta dhwani - payanam lyrics

Loading...

பாரென்னும் விரியலில்…
அதிகாலை வேளையில்…
அதிசய மாற்றம்…
கண்டேன்…

சிறு புல்லில் உருவாகும் குமிழ் போலே
அழகான உருமாற்றம் கொள்வோமே
கடல் தேடி நதி பாயும் ஜதி போலே
ஒரு தேடல் துணையாகும் இனிமேலே

பயணம்…
இனி ஒரு விதை ஜனனம்

பயணம்…
நல் விடியல்கள் துளிரும்

பாதை தெளியும்
நற் காலங்கள் இனி வாழ்வில் உதயம்
சிலை தேடும் கல் போலே
நிமிடங்கள்… வடிவாக்கும்… நொடிகள்

பயணம்…

பூமொட்டின் விழியோ
ஒளி நோக்கும் இதயம்
ஓவியம் நாடும் நிறம் போலே
நல்லெண்ணம்… கரைகாணும்… மனதுள்
பயணம்…
ஓர் அழகிய கால ரதம்

பயணம்…
இசையின் பெறு வெள்ளம்

உலர் நாளில் துதி காணும் இளங்காற்றைப் போல்
பிறர் வாழ்த்த பணிவோமே வாழ் நாளில்
கார் மேகம் தனில் தோன்றும் மழை போலே
விசை கொண்டு பயணிப்போம் புவயின் மேல்

பயணம்…

மின்னலைப் போல்…
ஒரு நொடிப் பொழுதில்…
வானையும் வருடும்…
தருணம்…



Random Lyrics

HOT LYRICS

Loading...