
thuva jb chandran - thiruppikkodu lyrics
lyrics
குறள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
நடந்தது என்ன புரியவில்லை
நாடகம் கண்டும் மனம் தெளியவில்லை
என்ன ஆச்சு காலம் கை விட்டாச்சு
மூச்சு விடக் கூட ஆசை விட்டுப் போச்சு
எதுக்கு வாழுற என்ன பண்ணப் போகுற
இதுக்கு மேலயும் எங்கப் போயி ஒழியுவ
உனக்கு இது எட்டாக்கனி
கண்டுக்காத சொல்லிக்கட்டும் உன் வழி தனி
சபைக்கு ஒரு வணக்கம் , சரித்திரத்தில் நிலைக்கும்
புது கதவு திறக்கும் , உனக்கும் இடம் கிடைக்கும்
வந்த வழி படு குழி , ஊர் கொடுத்த சாபம் பழி
தொடக்குறேன் சட்டப்படி , கேளு எந்தன் சவுக்கடி
தகுதிய செதுக்கிடு , நேரம் வரும் விழித்திரு
வெட்டிக் கத மாமனுக்கு ,தட்டிப் படம் காட்டிடு
இந்த பூமி பார்த்ததில்லை , கண்ணதாசன் தத்துப்புள்ள
வச்சக்குறி தப்பாதடி , மச்சான் இப்போ சரவெடி
திருப்பி கொடுக்க வந்தேன் கண்ணா டேய்
திரும்ப முளைச்சு வந்தேன் (ஆமாண்டா என் சக்கர கட்டி)
கணக்க முடிக்க வந்தேன் கையோட
கதைய தொடக்க வந்தேன் (யோவ் ..ஹா.. 2va.)
உலகமே விரட்டுது ஓடவிட்டு துரத்துது
அடுத்தவன் தேவைக்கு பலி ஆடு ஆக்குது
சரிகம படிக்கல்ல சங்கதி புடிபடல்ல
தெருவுல குப்பையாட்டம் என்கதியும் கிடக்குது
கேடுகெட்ட வஞ்சனை பட்டவரை வேதனை
கண்ணாடி முன்னாடி பிம்பம் கண்டபடி சிரிக்குது
வாழ்க்கை எனும் நாடக மேடையில் ஆடுறேன்
தடுக்கி விழுந்து புரண்டு எழுந்து தத்தளிக்கும்
நாகரீக பயணத்தில் மாட்டிக்கிட்டு மிதக்குறேன்
குட்டையில படகையும் கையக்கட்டி ஓட்டிக்கிட்டு
தோள் கொடுக்க யாருமில்ல தோழனுக்கோ நேரமில்ல
தேக்கி வச்ச வரிகள சொல்ல இப்போ மறக்கல
வெந்த புண்ண நோகடிச்சு நொங்கெடுத்து பூஜ வச்சு
ஏரியிற நெருப்புல குளுரையும் காயும் இந்த
கலியுக கும்பல் உன்ன கவுத்திடும் மெல்ல மெல்ல
மண்டி போட்டு வாழனுமா…? நெஞ்ச தூக்கி சாவனுமா …?
திருப்பி கொடுக்க வந்தேன் கண்ணா டேய்
திரும்ப முளைச்சு வந்தேன் (நெஜம்தான்டா இது நான்டா)
கணக்க முடிக்க வந்தேன் கையோட
கதைய தொடக்க வந்தேன் (வேடிக்க மட்டும் பார்)
காலம் கூடி கையில் வரும் ஒருநாள்
தெறிக்கவிடும் திருநாள்
தாங்கிய காய்ச்சுவடுகள் தந்த மன
வேதனை போதனை இன்றி
சாதனை படைத்து இந்த வையகம்
அரண்டு திகைக்க புதுமை பிறக்கட்டும்
பகல் கனவு கண்டு காரியம்
கைக்கு எட்டாது என்றும்
முடிவில்லா தொடர்கதை
போடும் தினம் விடுகதை
போராடு போராடி தடம் பதிக்க நீ உண்டாக்கு
உனக்கென ஒரு பாதை மலரட்டும் மரியாதை
அடங்கி ஒடுங்கி முடங்கி கிடக்க
பிறப்பு ஒன்று எதற்கு
ஆழ்கடலும் கொந்தளிக்கும் கர்வம் கொண்ட
தன் நம்பிக்கை உந்தன் பக்கம் இருக்கு
தீப்பந்தம் எடுத்து தொடுத்து
இருண்டு கிடக்கும் அச்சம் விலக்கு
அனுதினம் பயிற்சியை
மதி கொண்டு முயற்சி செய்
விதை புடைத்து முளைத்து
விஸ்வரூபம் எடுக்கட்டும்
உன் கணக்கு தனித்துவம்
தாகம் கொண்ட சுதந்திர
தாரக மந்திரம் இந்த
தரணியில் ஒலிக்கட்டும்
திருப்பி கொடுக்க வந்தேன் கண்ணா டேய்
திரும்ப முளைச்சு வந்தேன் (விட்டத புடிக்க வேண்டாமா ??)
கணக்க முடிக்க வந்தேன் கையோட
கதைய தொடக்க வந்தேன் (திரை போட்டு படம் ஓட்ட )
திருப்பி கொடுக்க வந்தேன் ராஜ்ஜா நான்
திரும்ப முளைச்சு வந்தேன் (இன்னும் கொஞ்சம் தெம்போட)
கணக்க முடிக்க வந்தேன் (வட்டி குட்டி மொத்தமா சேர்த்து)
கதைய தொடக்க வந்தேன் (கேட்டுக்கோ தங்கத் தம்பி)
ஒரு விஷயத்த நம்பி இறங்கி
திரும்ப திரும்ப நீ அத முயட்சி செய்றப்போ
அதுவே ஒரு நாள் தன்னால
வெற்றி ன்ற பரிசை உன் கைல திரும்ப தரும்
Random Lyrics
- la cassandra - el desgarre lyrics
- mammoth - the spell lyrics
- aiden everett - power lyrics
- godsickness - howwwww lyrics
- behavior (pol) - tyci lyrics
- chris cain - bad dream lyrics
- victor tavares - papéis lyrics
- reviv soul - atraídos pela fonte lyrics
- посев (possev-verlag) - открытая дверь (opened door) lyrics
- meka (ca) - tomato song lyrics