
vyeshuva maalyk - penne neeyum lyrics
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் பொது தான் மொழிகள் இனிக்கிறது
(பெண்ணே நீயும் …)
புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா
சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா
பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதேரியும்
தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்
கம்பன் செல்லில் சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது
(பெண்ணே நீயும் …)
மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை வந்ததே
பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே
மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்க்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்
நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பத்திரமாய்
(பெண்ணே நீயும் …)
Random Lyrics
- יגל - חומות lyrics
- various artists - prece dos oceanos lyrics
- ray toro - take the world lyrics
- sean miller - day ones lyrics
- smokey robinson - i'm the one lyrics
- yourlocalmess - inside lyrics
- dayshell - spit in the face lyrics
- hinterland jazz orchestra - jogis jungs lyrics
- 3lau, said the sky & christina - fire lyrics
- ico lyrics lyrics